அத்தி அரிதாம். அத்திக்குத்தான் எவ்வளவு சிறப்பு? அப்படி என்ன இருக்கிறது இந்த அத்தியில், கொஞ்சம் சுவடுகளை பார்க்கிறேன்.
அத்திப்பழச்சுவை உலகறிந்ததே. அத்தியின் பழம் மட்டுமின்றி அதன் இலை, வேர், பட்டையும் மருத்துவ பயன்பாட்டிற்கும் மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.
திருக்குளத்திலுருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு 48 நாட்கள் திவ்ய தரிசனம் தந்து மீண்டும் அக்குளத்திற்குள் செல்வது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. அது அந்த ஆண்டின் வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அதன் பிறகு 40 ஆண்டு கழித்து 2059-ல் தான் மீண்டும் வெளியே வருவார்.
பொதுவாக அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. அத்தியில் செய்யப்பட்ட பொருள் எந்த வடிவில் வீட்டில் இருந்தாலும் நல்லதாம், வீட்டில் நல்லவை நடக்குமாம், அதிர்ஷ்டமாம். அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன்.அது அறிவியல் சார்ந்து உண்மையும் கூட.
அத்தியின் நார் வலிமை வாய்ந்தது என்பதனால் பியர் கிரில்ஸ் கூட தனது தற்காப்புக்கு தனித்து விடப்பட்ட தீவில் அத்தி மரத்தின் விழுதுகளை தேர்ந்தெடுத்து கட்டு மரம் செய்ய பயன்படுத்துவார். பார்த்திருக்கிறேன்.
படிக்கும்போது காலாண்டு,அரையாண்டு மற்றும் இடையில் வரும் சிறு விடுமுறை நாட்களில் தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்படி ஒரு விடுமுறைக்கு சென்றிருக்கையில், தாத்தா தன் கையால் திரித்த அத்தி நரால் ஆன கயிறு ஒன்றை துள்ளி விளையாட எனக்கு கொடுத்தார்.அப்போது யாரிடமும் அக்கயிறு இல்லாததால் இளவரசி என்ற உணர்வு. பிறகு விடுமுறை முடிந்து வீடு திரும்பையில் வீட்டில் வளர்த்த ஆடு ஒரு குட்டி ஈன்றது. இந்த இளவரசி துள்ளி விளையாடிய கயிற்றில் புதிதாய் பிறந்த இளவரசி கட்டப்பட்டு கழுத்தில் சிறு மணி ஓசையுடன் துள்ளி விளையாடிய காட்சிகளை பார்த்ததில் தோன்றுகிறது ஆம் அத்திக்குத்தான் எவ்வளவு சிறப்பு!
- Pinch Things by Bhuvaneswari
Happy birthday bhoo 💜
ReplyDelete