Skip to main content

Posts

Showing posts with the label Speaker

ஒலி பெருக்கி

அரசமரத்தடி விநாயகர் தரிசனம்,கரும்பலகையில் தேதி மாற்றம், அன்றைய தேர்வுக்கு யார் எங்கு அமர்வது,எப்படி அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற நரி திட்டங்களுடன் தொடங்கும் பள்ளியை போல், தினமும் சீருடையில் வரவேண்டும் என்று வரைமுறை அல்லாமல் வாரத்திற்கு ஒரு நாள் வண்ண உடுப்பு அணிய வாய்ப்புண்டு.  வாரத்தில் எப்போதும் புதன் அன்று மட்டும்  அந்நாள் இருக்கும். அப்படி சென்ற நாட்களில், மாவட்ட கல்வித்துறை ஆட்சியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது.அந்த சுற்றறிக்கையில் மாவட்ட ஆட்சியாளர் வருகின்ற புதன் அன்று மக்களின் குறைகளை கேட்டறிய அவ்வூருக்கு வர இருப்பதால் இப்பள்ளியில் பயிலும் பெண் மாணாக்கர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி மாவட்ட ஆட்சியரின் வருகையை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. சாதாரண குரலில் ஒலித்த வாழ்த்து பாடல் சற்று ஓங்கி,மெல்லிய தாழ்ந்த குரல்களில் ஒலிக்க ஆயத்தமானது.வேறென்ன வண்ண உடை அணியும் புதன், புத்தாடை உடுத்தும் திருவிழா கோலாகலமானது.ஊர் மக்கள் கையில் மனுக்களுடன் ஆட்சியரை எதிர் பார்த்திருந்தனர்.மாலை 5 மணிக்கு வருவதாக சொன்ன ஆட்சியர் மாலை 6 மணிக்கு சங்கு ஒலித்த அரசு முத்தி